காமிக்ஸ் அன்பர் சமூகத்திற்கு வணக்கம். சென்ற பதிவில் ராணி காமிக்ஸ் காலகட்டத்தை வரையறுப்பது பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டோம், இப்போது அதை தொடருவோம். அனேகமாக கருத்து பகிர்ந்த ஏனயருடன் என்னுடைய கருத்தும் ஒத்து போவதில் ஆச்சர்யம் இல்லை.
- பொற்க்காலம்: # 1 (ஆகஸ்ட் '84) - # 90 (மார்ச் '88)
திரு.ராமஜெயம் பொறுப்பில் வெளி வந்த முதல் 90 இதழ்கள். தரமான மொழிபெயர்ர்பு, சர்வதேச கதாநாயகர்கள், மட்டும் இல்லாமல் கவ்பாய் கதைகள், போர் காவியங்கள், விஞ்ஞான கதைகள், என்று வீர பவனி வந்த கால கட்டம். முத்து காமிக்ஸின் பாரம்பரியம், மற்றும் லயன் காமிக்ஸின் நவீனத்துவத்துக்கு, சரியான போட்டி கொடுத்த வருடங்கள்.
நான் தமிழ் படிக்க கற்று கொண்ட அந்த ஆரம்ப கால புத்தகங்கள் உட்பட, என்னுடைய வாரம் ஒரு ரூபாய் கை செலவு பணத்தில் என்னால் பெருமையுடன் புது புத்தக கடைகளிலேயே வாங்க முடிந்த இதழ்கள் அடங்கிய காலம்.
அந்த கால கட்டங்களில் லயன் மற்றும் முத்து காமிக்ஸின் 2,3 ரூபாய் விலைகள் அடங்கிய இதழ்கள், என்னை பொறுத்த வரை உயர் குடி மக்களுக்கு விதிக்க பட்டது என்ற எண்ணம் கூட இருந்தது :))
இக்காலத்தில் வெளி வந்த புகழ் பெற்ற கதாநாயகர்கள்
(அவர்கள் அறிமுகம் ஆன வரிசைக்கு ஏற்ப):
ஜேம்ஸ் பாண்ட் James Bond
மூன்று குதிரை வீரர்கள் Three CowBoys
கிட் கார்சன் Kit Karson
டைகர் Tiger
சாகச வீரர் ஜானி மன்னர் பீமா இன்ஸ்பெக்டர் ஆசாத் புரட்சி பெண் ஷீலா Johnny Hazard
King Beema
Inspector Aazaad
Axa
ப்ரூஸ் லீ பில்லி ராயன் Bruce Lee
Billy
Buck Ryan
அனைவரும் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்றாலும், மிகவும் பிடிக்கும் என்ற வகையில், என் மனம் கவர்ந்த நாயகர்கள்:
- ஜேம்ஸ் பாண்ட் (சந்தேகமே இல்லாமல்),
- டைகர் (டொட்ட-டாங் என்று அவர் கூறும் பாங்கே அலாதி),
- மூன்று குதிரை வீரர்கள் (ஒற்றை கண் நபர், ஆரம்ப இதழில், வானத்தில் நட்சத்திரம் பார்த்து twinkle,twinkle பாட்டு படிக்கும் கட்டம், இன்றும் நினைவில் தங்கும் விஷயம்)
- வசந்தக்காலம்: # 91 (ஏப்ரல் '84) - # 288 (ஜூன் '96)
சந்தேகமே இல்லாமல் திரு.அ.மா.சாமி என்ற "ஆமா சாமி" பொறுப்பற்ற கால கட்டம். ராமஜெயம் விட்டு சென்ற நல்ல அடித்தளத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல், அவர் மனம் போன போக்கில் கதை கருக்களை கொன்று, கொத்து கரி போட்ட சமயம். ஆனாலும், ஜேம்ஸ் பாண்டு போன்ற கதாபாத்திரத்தின் துணையுடன், ராமஜெயம் காலத்தில் அறிமுகமான மற்ற கதாபாத்திரங்களின் மீதம் உள்ளம் கதைகளோடு, இன்னும் பல உலக புகழ் பெற்ற கதாநாயகர்களை அறிமுக படுத்தியதால், இதை வசந்த காலம் என்று கொள்ளலாம்.
இதன் கால கட்டம் எது வரை என்பதில் கட்டாயம் காமிக்ஸ் ஆர்வலர்களிடையே வெவ்வேறு கருத்துக்கள் எழலாம். ஆனால் என்னை பொறுத்த வரை, ஐரோப்பா கதைகள் மட்டும் இல்லாமல், ஏற்கனேவே இந்திரஜால் காமிக்ஸ் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகி இருந்த அமெரிக்கா கதாபாத்திரங்களை (King Features Syndicate) துணைக்கு அழைத்து கொள்ளப்பட்ட இதழ் 288 வரையிலான ராணி காமிக்ஸ், இவ்வட்டத்துக்குள் சரியாக பொருந்தும்.
ஏற்கனவே வெளியான கதாநாயகர்களுடன், இக்காலத்தில் வெளி வந்த புகழ் பெற்ற கதாநாயகர்கள்:
தில்லான் பக் ஜோன்ஸ் சிஸ்கோ கிட் மாடஸ்டி பிளைசி மாயாவி Thillon
Buck Jones
Cisco Kid
Modesty Blaise
Phantom
ஃபிளாஷ் கார்டன் ரிப் கிர்பி மான்டிரேக் முரட்டு காளை கார்த் Flash Gordon
Rip Kirby
Mandrake
Garth
இவர்களில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் பற்றி சொல்லவும் வேண்டுமா, எல்லோரையும் போல:
- மாடஸ்டி பிளைசி (அழகு, வீரம், மெல்லிய நட்பு கலந்த பெண்ணோவியம்)
- மாயாவி (நம்மை கானகங்களுக்கே கொண்டு செல்லும் கதை பாங்கு)
- மான்டிரேக் (அவர் மாளிகையை அடைய கடக்கும் முஸ்தீபுகள் போதாதா?)
- இருண்டக்காலம்: # 289 (ஜூலை '96) - # 500 (ஏப்ரல் '05)
ராணி காமிக்ஸ் என்ற சகாப்தத்திற்கு சாவு மணி அடிக்க தொடங்கிய கால கட்டம். அதற்க்கு முத்தாய்ப்பு வைப்பது போல, "கரும் புலி" என்ற கதாநாயகர் அறிமுகம் ஆனது 289 வது இதழில் தான். இவருக்கு போட்டியாக வடக்கில் வெளியான இன்னும் பல மொக்கை கதாபாத்திரங்களை தேடி பிடித்து தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களை திரு.அ.மா.சாமி வெறுப்பேற்றி ஓட வைத்த தருணம்.
போதா குறைக்கு, வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்த 1990 க்கு முந்தய ராணி காமிக்ஸ்களை திரும்பவும் மறுபதிப்பு என்ற பெயரில் தரம் குறைத்து வெளியிட்ட கால கட்டம். கடைசி நேரத்தில், வண்ண மயமாக இதே கதைகளை மூன்றாம் பதிப்பு வேறு பதித்து, பொறுமையை மிகவும் சோதித்த காலமும் இதுவே. ராணி காமிக்ஸின் தரம் குறைய காரண கர்த்தாவான திரு.அ.மா.சாமி, அதை புதைகுழியில் தள்ளும் 500 வது இதழ் வரை பொறுப்பேற்று இருந்தது ஒரு கரிய உண்மை.
இக்காலத்தில் வெளி வந்த "புகழ் (?!!!)" பெற்ற கதாநாயகர்கள்:
கரும்புலி ஜடாயு இந்திய டார்ஜான் டைசன் அக்னிபுத்ரா Karum Puli
Jadaayu
Tyson
Agniputra
தயவு செய்து, இதில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்னவென்று கேட்டு வெருபேற்றாதீர்கள், நண்பர்களே :)
எதை பதிப்பது - எதை விடுவது என்று தெரியாமல் திரு.அ.மா.சாமி, ஒரு கட்டத்தில் உலக புகழ் பெற்ற தோர்கள், மற்றும் ஹீ-மேன் கதாபாத்திரங்களை கூட ஒரு சில இதழ்களில் தோன்றி மறைய வைத்தார். வண்ணமிகு இதழ் என்று கூறி கொண்டு கடைசி கட்டங்களில் வெளி வந்த குப்பை ராணி காமிக்ஸ்களில் தீட்டப்பட்ட வண்ணம், நமது வீட்டு சிறுவர்கள் வரையும் ஓவியத்தை விட கேவலமாக (?!!!) வெளியானது, ராணி குழுமத்தினர், ராணி காமிக்ஸ் மேல் கொண்டு இருந்த "காதலை" பறை சாற்றும்.
தரத்தில் மட்டும் அல்ல, புத்தக வடிவைமப்பில் கூட பிரதிபலித்தது அந்த "காதல்". வள வள அட்டை போய் "ராணி முத்து" தரத்தில் ஒரு பேப்பர் அட்டை. புத்தக அளவு குறைந்து ரெடிமேட் கைக்குட்டைக்கு ஈடாக மாறியது. இப்படி கூறி கொண்டே போகலாம். ஆனால் குறைகள் மட்டுமே வாழ்கை அல்லவே.
காமிக்ஸ் ஆர்வலர்கள், ராணி காமிக்ஸின் அந்திம காலத்துக்கு முந்தய நேர்த்தி குறைந்த வெளியீடுகளை வெறுத்து ஒதுங்கினாலும், தொடர்ந்து 21 ஆண்டுகள் தங்கு தடையில்லாமல் மாதம் இருமுறை, நாள் தவறாமல் வெளிவந்த ஒரே தமிழ் காமிக்ஸ் என்ற பெருமை ராணி காமிக்ஸ் மட்டுமே சொந்தமாகும்.
மாதம் 1, மற்றும் 15 என்று புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தாலும், ஒரு நாள் முன்னேயே தவறாமல் கடைகளில் கிடைத்த ஒரே இதழ். என் அண்ணனுக்கும் எனக்கும் காலையில் யார் முதலில் எழுந்து கடைக்கு சென்று புத்தகம் வாங்கி முதலில் படிப்பது என்றே ஒரு போட்டி கூட இருந்தது. எப்பவும் போல தூங்கு மூஞ்சி ஆனா எனக்கு அது சாத்திய படவில்லை.
ராணி காமிக்ஸ் தனது பயணத்தை முடித்து கொண்ட போது வருத்தம் ஏற்பட்டாலும், உள்ளுக்குள் இனிமேலும் அதன் சகாப்தத்தின் கொலையை பார்க்க மாடோம் என்ற நிம்மதி கட்டாயம் இருந்தது.
கடைசி கால கட்டங்களில் ராணி காமிக்ஸ் வாங்குவதையே நிறுத்தி வைத்து இருந்த நான், 500 வது இதழை நெருங்கி கொண்டு இருந்த சமயத்தில் வெறும் சேகரிப்புக்கு மட்டும் வாங்குவதற்காக, நண்பர் ஒருவரின் அறிவுரைக்கு ஏற்ப, 2 வருட சந்தா கூட கட்டினேன். சந்தா ஆரம்பித்த இரண்டே மாதங்களில் ராணி காமிக்ஸ் "சுபம்" போட்டு விட, அந்த சந்தா பணமும் "ஸ்வாகா" ஆனது ஒரு தனி கதை.
எது எப்படியோ, ராணி காமிக்ஸ் இன்றும் சில வாசகர்களிடையே பசுமையான சில நினைவுகளை விட்டு சென்று இருப்பது உண்மையே. இந்த வலைபூ மூலம் அந்த எண்ணங்களை நினைவு கூறுவதே முதற் நோக்கம். முதல் 90 இதழ்கள் வெளி வந்த காலம் பொற்க்காலம் என்பதால், இன்னும் பல வலை பதிவுகளுக்கு நமக்கு குறை கூறும் எண்ணம் இருக்க போவது இல்லை. அதற்க்கு பிறகு வரும் சோக கட்டத்தை மறந்து, இந்த சுகமான எண்ணங்களிடையே சஞ்சரிக்க, நீண்டு போன முன்னோட்டத்துக்கு இத்துடன் முற்றுபுள்ளி வைத்து விட்டு, புத்தாண்டு முதல் ஆரம்பிப்போம்.
அதற்க்கு முன் உங்கள் மனம் கவர்ந்த கதாநயகர்கள் இவற்றில் யார், ஏன் என்று ஏன் நீங்கள் பதிய கூடாது? வோட்டும் போடலாமே.
சிரமம் கொண்டு பதிவுகள் பதிந்தாலும், ஏனோ தங்கள் கருத்துக்களை அந்த அந்த பதிவுகளில் பதிவதில், வருகை தரும் பெரும்பாலானோரிடம் ஒரு வித தயக்கம் உள்ளது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே. இந்த பழக்கத்தை ஒழித்து, மற்றவர்களையும் ஆர்வத்துடன் பங்கெடுக்க வைக்க என்ன மாற்றங்கள் மற்றும் புதுமைகள் செய்யலாம், என்றும் உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ளவும் ஆசை. கண்டிப்பாக இது சம்பந்தமான உங்கள் என்னோட்டங்களையும் பதியுங்கள்.
| கூடவே, இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை படிக்கும் ஆர்வத்துடன், இப்போதைக்கு விடை பெறுகிறேன். பி.கு.: 1. இந்த பதிப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து சித்திரங்களும், நமது ராணி காமிக்ஸ் பதிப்புகளின் வெவ்வேறு கால இதழ்களில் இருந்து, பிரதி எடுத்து, மேம்படுத்தி உபயகோபடுதப்பட்டுள்ளது. 2. நண்பர் சிவ், சென்ற பதிவின் பின்னூட்டத்தில், அன்றைய கால இந்திரஜால் காமிக்ஸ் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை பற்றி பதியாததை சுட்டி காட்டி இருந்தார். உண்மை தான், கிட்ட தட்ட 1980 ல் இருந்து 1989 வரை தமிழில் மொழியாக்கம் செய்து அவர்கள் வெளியிட்ட இதழ்கள், ஒரு காமிக்ஸ் பொக்கிஷம். ஆனால் அதன் மொழிபெயர்ப்பு ஏனோ என்னிடம் மற்ற தமிழ் காமிக்ஸ்கள் போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதே உண்மை. தமிழர்கள் முழுமையாக பங்கெடுக்காத ஒரு இதழ் என்பது அதற்க்கு ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். ஆனாலும், முழு வண்ணத்தில், வித்தியாசமான புகழ் பெற்ற கதாநாயகர்களை, தொடர்ந்து வெளியிட்ட இதழ் என்ற ஒரு தனிசிறப்பான மகுடம் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது. |
காமிக்ஸ் கூட்டணியினருக்கு!
ReplyDeleteகட்சிதமான பதிவு! பொற்கால ராணி காமிக்ஸ்-களில் டைகர், மூன்று குதிரை வீரர்கள், மன்னர் பீமா, இன்ஸ்பெக்டர் ஆசாத் என்ற வரிசையில் தான் எனக்கு பிடிக்கும்.
//டைகர் (டொட்ட-டாங் என்று அவர் கூறும் பாங்கே அலாதி),
மூன்று குதிரை வீரர்கள் (ஒற்றை கண் நபர், ஆரம்ப இதழில், வானத்தில் நட்சத்திரம் பார்த்து twinkle,twinkle பாட்டு படிக்கும் கட்டம், இன்றும் நினைவில் தங்கும் விஷயம்)//
அதே அதே! எனக்கும் ரொம்ப பிடிக்கும்! எனது பழைய நினைவுகளை கிளறி விடீர்கள்..!
//அந்த கால கட்டங்களில் லயன் மற்றும் முத்து காமிக்ஸின் 2,3 ரூபாய் விலைகள் அடங்கிய இதழ்கள், என்னை பொறுத்த வரை உயர் குடி மக்களுக்கு விதிக்க பட்டது என்ற எண்ணம் கூட இருந்தது//
ராணி காமிக்ஸ் எனது கிராமத்தில் கூட தொடர்ந்து கிடைக்கும். 25 பைசாக்களாக சேர்த்து ராணி காமிக்ஸ்-களை 1986 முதல் வாங்கினேன். எனது சித்தப்பா நியூஸ் ஏஜென்ட் மற்றும் அவரது மகன்தான் (அண்ணன்) நியூஸ் பாய். என்வே காசில்லா சில சமயங்களில் கடனுக்கு கூட சில இதழ்களை வாங்கியிருக்கிறேன். 1986-க்கு முன் சலூனிலும், நண்பர்களிடம் இரவல் வாங்கியும் படித்திருக்கிறேன். முத்து குடும்ப இதழ்களை டவுனுக்கு தினமும் போய் வரும் எனது பால்கார பெரியப்பா வாங்கி வருவார். 1989 முதல் தான் முத்து குடும்ப இதழ்களை வாங்க தொடங்கினேன்.
ராணி காமிக்ஸ் வாங்க காலை 6 மணிக்கெல்லாம் அண்ணன் வரும் வழியில் காத்திருந்ததும், புது இதழை பெற்றதும் ஏற்படும் ஒரு அற்புதமான சந்தோஷ உணர்வும் இன்னும் கூட silirpoottugirathu.
'நாலாவது பழி', 'தப்பி ஓடிய இளவரசி', ' பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் ', 'புரட்சி வீரன்', 'ராணுவ ரகசியம்', 'விசித்திர விமானம்', 'மரண பரிசு' , 'கொலை வாரண்ட்' , 'பழிக்கு பழி' போன்ற இதழ்கள் என்னை மிகவும் பாதித்த கதைகளை கொண்டவை. இது போன்ற கதைகளை சற்றே விரிவாக பதிவிட்டால் வரவேற்பேன்.
//சந்தேகமே இல்லாமல் திரு.அ.மா.சாமி என்ற "ஆமா சாமி" பொறுப்பற்ற கால கட்டம். //
-மனசை படிச்சிட்டீங்க!
//இவருக்கு போட்டியாக வடக்கில் வெளியான இன்னும் பல மொக்கை கதாபாத்திரங்களை தேடி பிடித்து தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களை திரு.அ.மா.சாமி வெறுப்பேற்றி ஓட வைத்த தருணம்//
இன்ஸ்பெக்டர் ஆசாத், மன்னர் பீமா போன்ற படைப்புகள் வடக்கில் சில பல இரோப்பிய காமிக்ஸ்-களுடன் போட்டி போடும் அளவுக்கு உருவாக்கப்பட்டன. ஆனால் ௨008 -இல் மொக்கை காமிக்ஸ் என்ற பதிவில் இடம் பெற வேண்டும் என்ற 'தொலை' நோக்கு பார்வையுடன் தான் திரு. சாமி அவர்கள் நீங்கள் சொன்ன 'மொக்கை' -களை தேடி தேடி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப் படுத்தியிருக்க வேண்டும் என்பது எண்ணம்.
ரஃபிக்,ஜோஷ்
ReplyDeleteகால யந்திரத்தில்பின்னோக்கி பயணிக்க தயாராகி விட்டேன், என் சிறிய காற்சட்டை என்னிடம் இல்லை, ஆனால் அது ஒர் பிரச்சினையாக இருக்காது என நம்புகிறேன். காணப்போகும் கதாநாயகிகளிற்கெல்லாம் கண் சிமிட்டப்போகிறேன். கொஞ்சம் பொறுத்தருள்க.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன். நிறைய நாயகர்கள் என் மனதின் எங்கோ ஒர் மூலையில் என் கண்களிற்கு தெரியாது ஒளிந்திருந்தாலும். உங்கள் பதிவுகள் மூலம் அவர்களை கண்டு கொள்வேன் எனும் நம்பிக்கை எனக்குண்டு.
கருத்துக்களை எதிர்பார்த்து இருக்கும் வேதனையை இப்போது நானறிவேன். எனினும் படிப்பவர்கள் விரும்பினால் ஒழிய இதில் பெரிய மாற்றங்களை செய்ய முடியும் என நான் கருதவில்லை. நான் இயலுமான வரை , நான் படிக்கும் காமிக்ஸ் நண்பர்களின் வலைப்பூக்களில் என் கருத்தினை பதிந்தே வருகிறேன், ஆனால் என் பதிவுகளில்,கருத்துக்களை பதிந்திட அவர்களே தயங்கும் போது, மற்றவர்கள் பற்றி கூறவும் வேண்டுமா.
காத்திருப்பதனை தவிர வேறு வழியில்லை.
உற்சாகத்துடன் தொடருவோம்
இராணி காமிக்ஸின் பொற்காலம் பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கலாம். என்னுடைய சென்னை நண்பர் ஒருவர் தான் மன்னர் பீமா போல் இருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார். இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.
ReplyDeleteகரும்புலி ஒரு காமிக்ஸ்க்கே மூடுவிழா நடத்தியிருக்கிறார். அவரை பற்றி தனியாக ஆராய்ந்து எழுத வேண்டும்.
அருமையான பதிவு, வழக்கம்போல்.
வணக்கம்:
ReplyDeleteநானும் சிறுவயதில் நிறைய தமிழ் காமிக்ஸ் (வரைகதை) படித்துள்ளேன். தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் வரைகதை பற்றி கட்டுரை என்ற கட்டுரையை (http://ta.wikipedia.org/wiki/தமிழ் வரைகதை) விரிவாக்க பின்வரும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் தயவுசெய்து தரவும்.
1. ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர்த்து தமிழ் பாத்திரங்கள் யாராவது ரானி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், இதர காமிக்ஸ் இடம்பெற்று இருக்கின்றனவா?
2. சிறுவயதில் தமிழ்நாட்டிலேயே எழுதப்பட்ட வரையப்பட்ட காமிஸ் சில படித்துள்ளேன். அவற்றின் பெயர்கள் இப்போது யாபம் இல்லை. உங்களுக்கு எவையாது தெரிந்தால் கூறவும்.
3. மேத்தா காமிக்ஸ், இந்திராஜால் காமிக்ஸ் பற்றி மேலதிக தகவல்கள் கிடைக்குமா?
மிக்க நன்றி.
My Favorites
ReplyDeleteதப்பி ஓடிய இளவரசி, மன்னர் பீமா, டொட்ட-டாங் டைகர், இன்ஸ்பெக்டர் ஆசாத்
உங்களுக்கு ஒரு சிறிய குட்டு...எனென்றால் மன்னர் பீமாவை "உங்கள் மனம் கவர்ந்த கதாநாயகர்கள்" poll இல் விட்டு விட்டீர்களே.
அன்று அப்புத்தகங்களை படித்தது ஒரு ஜாலி தான்...ம்ம்ம்...
நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு
ReplyDeleteமிகவும் அருமையாக இருந்தது. வெகு விரைவில் நானும் ஒரு பதிவை இட்டு விடுகிறேன்.
நன்றியுடன்,
க.கொ.க.கூ
நண்பரே,
ReplyDeleteராணி காமிக்ஸ் பற்றிய இந்த பதிவு அருமை. ஆனாலும் நீங்கள் இவ்வளவு ஆராய்ச்சி செய்யும் போது, தவறுகளை தவிர்க்க பாருங்களேன்?
உதாரணமாக புரட்சிப் பெண் ஷீலா தான் AXA என்று கூறிய நீங்கள் ஏன் மூன்று குதிரை வீரர்கள், டைகர், பீமா, பில்லி, போன்றவர்களின் உண்மையான பெயரை போடவில்லை? மேலும் மன்னிக்க முடியாத தவறு என்னவெனில் முத்து காமிக்ஸ் (விங் கமாண்டர் ஜார்ஜ்) மற்றும் மாலைமதி காமிக்ஸ் (ஜானி ஹஸார்ட்) கதைகளில் வந்த நாயகனை ராணி காமிக்ஸ் கதைகளில் "சாகச வீரர் ஜானி" என்று தான் கூறுவார்கள். அவரை நீங்கள் ஏன் திகில் காமிக்ஸ் நாயகர் ரிபோர்டர் ஜானி என்று தவறாக எழுதி உள்ளீர்கள்?
மேலும் சிஸ்கோ அவர்களை ராணி காமிக்ஸ்'இன் வசந்த காலத்தில் டிஸ்கோ என்றுதான் கூறுவார். அதையும் தயவு செய்து மாற்றுங்கள். மாடஸ்டி அவர்களை ராணி காமிக்ஸில் மாடஸ்தி (வித்தியாசத்தை கவனியுங்கள்) கூறுவார்.
என்ன சரிதானே?
காமிக்ஸ் பிரியன்.
very nice post, iam also fighting with brother to read the rani comics in the morning. i like inspector azad, because you can the facial art remind the european art culture. i think karumpuli istranslated from malayalam comics?
ReplyDeleteஅன்பர் வெங்கி அவர்களே, முதன்மையாக வந்து முத்தென பின்னோட்டம் இட்டதற்கு நன்றி. என்னுடைய என்ன ஓட்டங்களும் உங்களுடத்தையும் ஒத்து போவதில் மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்ட ராணி காமிக்ஸ் இதழ்கள் எனக்கும் மிகவும் பிடித்தவையே... வரிசைப்படி அதை அணுகும் போது, விரிவாக விளக்கி விட்டால் போயிற்று.
ReplyDeleteதிரு. சாமி'க்கும் நமது மொக்கை காமிக்ஸ் நபருக்கும் எதவாது உள்குத்து இருக்குமோ...:) தொடருங்கள் உங்கள் ஆதரவை.
ஷங்கர் அன்பரே: இப்போதைக்கு நான் மட்டுமே பதிவுகள் இட்டு கொண்டு இருக்கிறேன். பங்கு வேட்டையர் அவர் பங்களிப்பை அளிக்க இன்னும் ஆரம்பிக்கவில்லை. கால இயந்திரத்தில் கூட பயணிக்க தயாராகியதற்கு நன்றி. ஆனால் பார்க்கும் கதாநாயகிகளிற்கெல்லாம் கண் சிமிட்டப்போகிறேன் என்று சொல்லி வில்லி கார்வின் போன்ற கட்டு மஸ்தான நபர்களிடம் அடி வாங்கி கொடுக்காமல் இருந்தால் நல்லது :)
பின்னூட்ட சோகம், ஒரு தவிர்க்க முடியாத வேதனையே... ஆனால் நான் முன்கூறியது போல படித்து விட்டு பின்னூட்டம் இடாத அன்பர்களை விட, மறவாமல் பின்னூட்டம் இடும் உங்களை போன்ற நபர்கள் இருக்கும் வரை என் பதிவுலக பயணம் தொடரும் என்பதில் ஐயமில்லை.
ஜோஸ்: ஒரு வழியாக தங்கள் வரவை இந்த வலைப்பதிவிற்கு தந்ததற்கு நன்றி. ராணி காமிக்ஸ் பொற்காலம் பற்றி தான் இன்னும் 90 இதழ் பதிவுகளில் விரிவாக பார்க்க போகிறோமே... பின்பு என்ன கவலை. அந்த சென்னை நபர் யாரோ ? விரைவில் உங்கள் பங்களிப்பை பார்க்கவும் ஆவல்.
நர்கீரரே, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் கேள்விகளுக்கு பதில் அனுப்புகிறேன்.
மகா ரசிகரே: உண்மையே. மன்னர் பீமா எனக்கும் பிடித்த கதாபாத்திரம் என்பதால்தான் அவரை படத்துடன் பிரசுரித்து இருகிறேன். ஆனாலும் அவர் தோன்றிய கதைகள் மிகவும் குறைவு என்பதுடன், சிறந்த மூன்று என்ற கட்டுபாட்டில் அவரை சேர்க்க முடியவில்லை. மன்னர் பீமாவுக்கு Other option மூலம் ஓட்டளித்தது நீங்கள் தான் என்று தெளிவாக தெரிகிறது :)
க கொ க கூ அன்பரே: தங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் குறைகள் நியாமனாவை endrallum, அனைத்தையம் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. நீங்கள் ஒரு விசயத்தை நினைவு கூற வேண்டும். ராணி காமிக்ஸில் வெளி வந்த அனைத்து கதாபாத்திரத்துக்கும் ஆரம்பத்திலேயே மூலம் அறிவது ஒரு கடினமான செயல். போக போக அவர்களை பற்றி தெரிய வரும் பொது, இந்த பதிவில் நான் அதை சேர்த்து வருவேன். ஆனாலும் ராணி காமிக்ஸ் மாடஸ்தி, டிஸ்கோ என்று தவறாக பெயர் நாமம் சொட்டியத்தை நாமும் பின் பற்ற தேவை இல்லை. ஜானி கதையில் அவரை பெரும்பானவர்களுக்கு ரிப்போர்ட்டர் என்ற முறையில் அறிமுகமானதினாலேயே அதை உபயோகித்தேன். நீங்கள் குறிப்பிட்ட மற்ற கதாபத்திரத்துக்கு மூலம் உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் இந்த வலைப்பூவின் சிரமத்தை பகிர்ந்து கொள்ளலாமே.
இந்த வலைப்பூவில் முதல்முறையாக குறைகளை சுட்டி காட்டி ஒருவர் கருத்து இட்டு இருப்பதாய் வரவேற்கிறேன். அவைகள் இந்த வலைபூவினை மேலும் மேபடுத்த உதவும் என்ற எண்ணத்துடன், சரியான அர்த்தத்துடன் எடுத்து கொள்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆக பூர்வமான கருத்துகளை பதிய மறவாதீர்.
டைகர்: உங்கள் அனுபவம் எனக்கும் பொருந்தும். வருகைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி. அடுத்த முறை தமிழிலேயே பதிந்தால் மிகவும் சந்தோஷ படுவேன். இந்த பிரத்யேக வலைப்பூவின் நோக்கமே அது தானே. :)
ஓட்டளிப்பில் பங்கெடுத்த எல்லாருக்கும் நன்றி. இப்போதைக்கு முதன்மையாக இருக்கும் கதாநாயகர்கள் என்னுடைய கணிப்பின் படியே இருக்கிறது. வருகை தரும் மற்றவரும் பங்களிப்பதற்காக வோட்டு பெட்டியை இப்படியே இன்னும் சில காலம் திறந்து வைக்க எண்ணபட்டுளேன். பார்போம், இப்போதைய கதாநாயகர்கள் முன்னணியில் இருப்பார்களா, இல்லை பின் தாங்குவார்களா என்று.
நான் கூட ராணிக் காமிக்ஸின் தீவிர ரசிகராக இருந்தவன் தான். 1993 - 1995 வரையான காலம் அது. அப்ப யாழ்ப்பாணத்தில் யுத்த காலத்திலும் ராணிக் காமிக்ஸ், கோகுலம், அம்புலிமாமா தவறாமல் வாங்குவது. சில சமயம் புத்தகம் வராது (சண்டை..இதர பிற காரணங்கள்) தவித்துப் போய் விடுவோம்..
ReplyDeleteஎனக்கு பிடித்த கதாபாத்திரம் மாயாவி தான்..
1995 களிலே நீங்கள் சொன்ன மாதிரி ராணிக் காமிக்ஸ் போரடிக்கத் தொடங்க...வாங்குவதை குறைத்து மொத்தமாக நிறுத்தியே விட்டேன்..
வழு வழு அட்டையுடன், புத்தம் புதிதாய் நான் சில வருடங்கள் தொடர்ந்து படித்து ரசித்த ராணி காமிக்ஸ் பற்றி இவ்வளவு விரிவாய் எழுதி வருவதற்கு .... மிக்க நன்றி!
ReplyDelete'அழகியை தேடி!' பற்றி உங்கள் விரிவான பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
Phantom was my favorite.
ReplyDeleteI believed Phantom existed.
மீண்டும் வந்தமைக்கு காமிக்கியல் தலைவர் ரபிஃக் ராஜா அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteநண்பரே, உங்கள் நல்லெண்ணத்தை நான் என்றும் பொய்க்க மாட்டேன்.
அழகியை தேடியாகி விட்டதா? எப்போது நாங்கள் அந்த அழகியை பார்ப்பது?
ஏம்பா பேராண்டி, இங்க யாரோ ஒர் அழகி வரப்போறாதா சொன்னாங்களே, அந்த நிலவைத்தான் பாக்க வந்திருக்கேன், அழகியைத் தேடி வந்திருக்கேன். காட்டுங்க அவளைக் காட்டுங்க.
ReplyDeleteபதுங்கு குழியில் இருந்த வெளியே வந்து கருத்து பதிந்த டொன் லீக்கு நன்றிகள். நீங்கள் கூறியது மிகவும் சரி. ராணி காமிக்ஸ் பொற்காலம் என்று அதை சும்மாவா கூறினார்கள். தமிழகத்தில் பரவலாக கிடைத்தது போல இலங்கையில் கிடைக்காத போதும், தங்களை போன்ற ஆர்வலர்கள் இன்றும் ராணி காமிக்ஸை போற்றவதில் இருந்தே அதன் அபிமானம் நன்கு தெரிகிறிது.
ReplyDeleteசுந்தர், இன்னொரு ராணி காமிக்ஸ் ரசிகரை சந்திப்பதில் மன மகிழ்ச்சி.
நாதேஷ், நானும் அப்படியே.... ஆனால் அது சிறு வயதில் மட்டுமே
சுலாகி அன்பரே, அழகியை இப்போது நீங்களும் தரிசிக்கலாம். புது பதிவு உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறது.
தாத்தா, என்னுடைய இன்னொரு வீட்டுக்கும் (சின்ன வீடு இல்லை) வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் கண்களுக்கு விருந்து படைக்க ஒன்று அல்ல இரண்டு அழகிகள் புது பதிவில் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
வருகை தந்து உங்கள் மேன்மையான கருத்தை பதிந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. புது பதிவை படித்து விட்டு தங்கள் மேன்மையான கருத்துகளை பதிய ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்து முடிக்கிறேன்.
Dear Rafique,
ReplyDeleteI have seen your blog today only. I am also fan of tamil comics in my childhood days. I love lion comics more than rani comics because of their different type of pictures and different heros. Please write something about anti hero spider, Archie, Laurence david, Erummbu kai Mayavi,johny nero, karsan etc. a.ko.the kalagam, Alivu, Kollai, Theemai marakka mudiyathu. If u know about, Yar antha mini spider, Sathuranga vilayattu, King kobra, Manchal poo marmum, Yar antha mini archie, etc etc are beatiful stories in lion comics. If you have the story books, please share lion comics heros also. I love Laurence david among all comic heros.
Dear Rafique,
ReplyDeleteYour Vimarsanam about the rani comics is fantastic. In your childhood, i think you were totally adict for rani comics. Yes..myself also. Most of the tamil gents who are in the middle age now are the fan of that old comics, ambulimama, Mayajala kathaigal etc. Do you aware of Mayajala kathigal? i know, The mayajal stories which were published in 80's had quality more than harrypotter. I read many beautiful mayajal stories more than Horrypotter stories at the time of rani comics age (vikraman, chittira kullan,parakkum kambalam,parakkum kuthirai,maya mothiram,maya vilakku etc,). Ambulimama was also one of the beauty which is the base for many tamil middle age gents imagination power. I am in abroad and i have published many research papers in international level (more than 60: dont take this as suya puranam). Still i am doing lot of imagination in technologywise. i think this is happening because of my reading habit in my childhooddays and also love on lion comics, Muthu comics, rani comics, ambulimama, Mayajala kathigal etc. We have to thank the publishers who published beutiful stories in 80s.Our sons and daughters are missing lot about these type of stories. Thanks for your blog to remember many things. hats off to you rafique.
Dear Sir,
ReplyDeleteI greatly appreciate your effort. Thank you.
Is there any other comics that is published in Thamil? What happened to Lion & Muthu comics?
Thanks